இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை வென்றார் இந்துமதி கதிரேசன்

கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார்.தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருதை வென்றார் இந்துமதி கதிரேசன்
Published on

அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்றிரவு நடந்தது. இதில் 2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை மிசோரத்தை சேர்ந்த லாலியன்ஜூலா சாங்தே பெற்றார்.

2023-24-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான விருது தமிழ்நாட்டை சேர்ந்த இந்துமதி கதிரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டியில் ஒடிசா எப்.சி. வெற்றி பெறுவதில் முக்கிய பங்காற்றிய இந்துமதி 5 கோல் அடித்தார்.

கடலூரைச் சேர்ந்த இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றுகிறார். தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவர் கவுரவமிக்க இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com