ஐ.எஃப்.எல். சீசன் 2026-27 சீசன் அக்டோபர் 16-ந்தேதி தொடங்குகிறது

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடலாம்.
IFL
ஐ.எஃப்.எல்.
Published on

இந்திய கால்பந்து லீக் (IFL) 2026-27 சீசன் அக்டோபர் 16-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஃப்.எல். ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. இதில் 11 அணிகளில் 10 அணிகளின் பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர். மொஹம்மெடன் ஸ்போர்ட்டிங் கிளப் அணி சார்பில் மட்டும் நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.

ஆளும் குழு மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) ஆகியவை லீக் போட்டியின் ஒளிபரப்புச் செயல்பாட்டையும் ஆய்வு செய்தன. 2025-26 சீசன் சுருக்கப்பட்ட தொடராக இருந்தபோதிலும், 17.56 மில்லியன் நேரடித் தொலைக்காட்சிப் பார்வையாளர்களை ஈர்த்திருந்தது.

தொடக்க தேதி இப்போது உறுதி செய்யப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2026-27 ஆம் ஆண்டுக்கான சீசனை வெற்றிகரமாக அமைத்துத் தருவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் துணைப் பொதுச் செயலாளர் எம். சத்தியநாராயண் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com