விசா மறுப்பு: அமெரிக்கா செல்ல முடியாமல் மெக்சிகோவில் காத்திருக்கும் பாலஸ்தீன கால்பந்து சங்க தலைவர்

பாலஸ்தீன கால்பந்து சங்க தலைவருக்கு விசா வழங்க அமெரிக்க மறுத்துவிட்டதால், போட்டியை காண செல்ல முடியாமல் மெக்சிகோவில் உள்ளார்.
பிஃபா உலக கோப்பை கால்பந்து
பிஃபா உலக கோப்பை கால்பந்துபிஃபா உலக கோப்பை கால்பந்து
Published on

48 அணிகள் பங்கேற்கும் பிஃபா உலக கோப்பை கால்பந்து தொடர் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. போட்டி மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறுகிறது.

மெக்சிகோவில் நடைபெற்ற போட்டியில் மெக்சிகோ- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் மெக்சிகோ வெற்றி பெற்றது. 48 அணிகள் விளையாட தகுதி பெற்றாலும் பாலஸ்தீன உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்து சங்க தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று அவர்கள் மெக்சிகோவில் போட்டியை ரசித்தனர். அமெரிக்காவில் நடைபெற இருக்கும் போட்டியை காண அவர்கள் செல்ல வேண்டும். ஆனால், பாலஸ்தீன கால்பந்து சங்க தலைவருக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்துவிட்டது. இதனால் அவர் மெக்சிகோவில் உள்ளார்.

விசா தொடர்பாக அமெரிக்க அரசிடம் பேசி வருவதாக பிஃபா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா இவருக்கு மட்டுமல்ல. சோமாலியா நடுர், ஈரான் அணியின் போட்டோகிராபர் போன்றோருக்கும் விசா வழங்க மறுத்துவிட்டது.

அமெரிக்க அரசு பாலஸ்தீன கால்பந்து சங்க தலைவருக்கு விசா மறுக்கப்பட்டது குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com