கோல் இன்றி டிராவில் முடிந்த உருகுவே- தென் கொரியா ஆட்டம்

இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினர். இரண்டாவது பாதியில் முதல் கோலை பதிவு செய்ய கடும் போட்டி
கோல் இன்றி டிராவில் முடிந்த உருகுவே- தென் கொரியா ஆட்டம்
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எச் பிரிவில் உள்ள உருகுவே மற்றும் தென் கொரியா அணிகள் விளையாடின. துவக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு கோல் கம்பத்தை நோக்கி முன்னேறினர். இரு தரப்பினரும் கோல் வாய்ப்பை தவறவிட்டனர். இதனால் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

இரண்டாவது பாதியில் எப்படியாவது ஒரு கோலை பதிவு செய்துவிட்டால் வெற்றி பெற முடியும் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். எனினும் ஆட்டநேர முடிவு வரை கோல் அடிக்கவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி பலிக்கவில்லை. எனவே, கோல் இன்றி ஆட்டம் டிரா ஆனது. இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com