இன்றுடன் ஓய்வு- சுனில் சேத்ரியை கவுரவித்த FIFA உலக கோப்பை அமைப்பு

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.
இன்றுடன் ஓய்வு- சுனில் சேத்ரியை கவுரவித்த FIFA உலக கோப்பை அமைப்பு
Published on

புதுடெல்லி:

இந்திய கால்பந்து அணிக்காக கடந்த 20 ஆண்டுகளாக சுனில் சேத்ர்பங்களிப்பு அளித்து வந்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

அவர் ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து சுனில் சேத்ரி இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்காக ஃபிஃபா உலக கோப்பை அமைப்பு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் அவரின் சாதனையை பதிவிட்டு ஃபிஃபா உலக கோப்பை அமைப்பு கவுரவித்துள்ளது. இந்த தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com