கத்தார் அணி மீண்டும் தோல்வி: 3-1 என்ற கோல்கணக்கில் செனகல் அபார வெற்றி

தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.உலகக் கோப்பையில் கத்தார் அணி இன்று முதல் கோலை பதிவு செய்தது
கத்தார் அணி மீண்டும் தோல்வி: 3-1 என்ற கோல்கணக்கில் செனகல் அபார வெற்றி
Published on

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று இரவு நடந்த குரூப்-ஏ லீக் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தார் அணி, செனகலுடன் மோதியது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செனகல் வீரர்கள், முதல் பாதி ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றனர். அந்த கோலை 41வது நிமிடத்தில் பவுல்யே தியா அடித்தார்.

அதன்பின் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 2வது கோலை பதிவு செய்தது செனகல். 48வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார் பமாரா டைதியோ.

அதன்பின் போட்டியை சமன் செய்யும் நோக்கில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட கத்தார் அணிக்கு 78வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. முகமது முன்டாரி கோல் அடித்து ஆறுதல் அளித்தார். உலகக் கோப்பையில் கத்தார் அணியின் முதல் கோல் இதுவாகும்.

அதன்பின், கத்தார் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த செனகல் அணி 84வது நிமிடத்தில் மற்றொரு கோல் போட்டது. மாற்று வீரர் சம்பா டியங் இந்த கோலை பதிவு செய்தார். இறுதியில் 3-1 என செனகல் அபார வெற்றி பெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com