போராடி கோட்டைவிட்ட வீரர்கள்... கோல் இன்றி டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம்

இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது
போராடி கோட்டைவிட்ட வீரர்கள்... கோல் இன்றி டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம்
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப் பிரிவில் உள்ள மொராக்கோ, குரோசிய அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் எந்த அணி முதலில் கோல் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது.

இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் கோல் வாய்ப்புகளை தொடர்ந்து தவறவிட்டதால் கடைசிவரை கோல் அடிக்கப்படவில்லை. எனவே, கோல் இன்றி போட்டி சமனில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com