தோல்வியால் விரக்தி.. மைதானத்தில் ஸ்பெயின் வீரர்கள் மீது அர்ஜென்டினா வீரர் சரமாரி தாக்குதல் - வைரல் வீடியோ

தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர்.
ஸ்பெயின் வீரர்களுடன் லியாண்ட்ரோ பரேடெஸ் மோதல்
ஸ்பெயின் வீரர்களுடன் லியாண்ட்ரோ பரேடெஸ் மோதல்
Published on

2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அதிர்ச்சி தோல்வியடைந்தது.

தோல்வியை அடுத்து மைதானத்தில் அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர்களை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாக்குதல்

கூடுதல் ஆட்ட நேரத்தின் 106வது நிமிடத்தில் மாற்று ஆட்டக்காரர் பெரான் டோரஸ் அடித்த கோலால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஆட்ட முடிவில் நடுவர் இறுதி விசிலை ஊதியதும், ஸ்பெயின் வீரர்கள் தங்களது வெற்றியை மைதானத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடத் தொடங்கினர்.

அப்போது விரக்தியில் இருந்த அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் தற்காப்பு ஆட்டக்காரர் எரிக் கார்சியாவை நோக்கி ஆவேசமாக பாய்ந்து மோதலில் ஈடுபட்டார்.

கார்சியாவின் கழுத்தைப் பிடித்து பரேடெஸ் இரண்டு முறை தாக்கினார்.

இந்த மோதலைத் தடுக்க வந்த ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திரம் காவி ஓடி வந்தார். ஆனால், இதனால் மேலும் ஆத்திரமடைந்த பரேடெஸ், காவியின் முகத்தில் பலமாக ஒரு குத்து விட்டார்.

இதனுடன் அர்ஜென்டினாவின் தியாகோ அல்மாடா, தலையிட்டு காவியை கீழே தள்ளியது மேலும் பதற்றத்தை அதிகரித்தது.

நிலைமை மோசமாவதைக் கண்ட அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனிஉடனடியாக மைதானத்திற்குள் விரைந்து வந்து தன் அணி வீரர்களைக் கட்டாயப்படுத்தி அங்கிருந்து இழுத்துச் சென்றார்.

ரெட் கார்டு

ஆட்டம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட போதிலும், மைதானத்தில் சக வீரர்களை தாக்கியதற்காக நடுவர் ஸ்லாவ்கோ வின்சிச், பரேடெஸுக்கு ரெட் கார்டு காண்பித்து மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.

முன்னதாக, ஆட்டத்தின் வழக்கமான 90 நிமிடங்களின் போதே அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறியிருந்தார். இதனால், ஒரே போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு இரண்டு ரெட் கார்டு அட்டைகள் கிடைத்தன.

ஆட்டம்

முன்னதாக இறுதிப்போட்டி ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதேபோல் ஆட்டத்தின் 2-ஆவது பாதியிலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

90 நிமிடங்கள் முடிவிலும் ஆட்டம் கோல் அடிக்கப்படமல் சமநிலையில் இருந்தது.

தொடர்ந்து ஆட்டம் கூடுதலாக 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர் பெரான் டோரஸ் கோல் அடிக்க அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்ய அதிக முனைப்பு காட்டினர்.

எனினும் ஆட்டத்தின் இறுதி வரை அர்ஜென்டினா அணி கோல் அடிக்க தவறியது.

இதையடுத்து ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com