

ஸகாட்லாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மதுரையை சேர்ந்த செல்வ பிரபு திருமாறன், உணவு ஒவ்வாமை (food poison) காரணமாக தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சில விஷயங்களை செய்திருந்தாலே பதக்க மேடையில் முதலிடம் பிடித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
காமன்வெல்த் ஆடவர் டிரிபிள் ஜம்ப் போட்டியில், சக இந்திய வீரரான பிரவீன் சித்ராவேல் (16.58மீ) அடுத்தபடியாக செல்வா பிரபு 16.52 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் அந்த தங்கப் பதக்கத்தை வென்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் உண்மையிலேயே தங்கம் வெல்வேன் என்று நம்பினேன், ஆனால் போட்டி தொடங்கிய பிறகு, உடல்நலக்குறைவு மற்றும் உணவு ஒவ்வாமை (food poisoning) போன்ற பிரச்சனைகள் ஏற்படும்போது என்ன செய்வது?
இறுதியில், நமக்கென ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நான் உணர்கிறேன். நான் மனதளவில் வலிமையானவன். அதனால் என்ன நடந்தாலும் அதைச் செய்து முடிப்பேன் என்று முடிவு செய்தேன். என்னை நானே தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொள்வேன்.
உடல்நலக்குறைவு தனது செயல்திறனை பாதித்ததன் காரணமாக, ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேன்.
எனது தனிப்பட்ட சிறந்த சாதனையான 17.05 மீட்டருக்கு நெருக்கமான ஒரு தாண்டுதலை நிகழ்த்தியிருந்தாலே, அந்தப் போட்டியில் தங்கம் வெல்வதற்கு போதுமானதாக இருந்திருக்கும்.
நான் உடல் நலத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் அடுத்த முறைக்கு நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். என்னால் இன்னும் அதிகமாகப் போட்டியிட முடியும். உடல் நலத்துடன் இருக்கவும் முடியும். இது மேடையைப் பற்றியது. என்னிடம் அந்த நிலைத்தன்மை இருக்கிறது.
எல்லாம் அந்த குறிப்பிட்ட நாளைப் பொறுத்தது. நான் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புகிறேன். இப்போது எனது அணுகுமுறையைச் செம்மைப்படுத்த விரும்புகிறேன்.
ஒருமுறை அது எனக்குப் பழகிவிட்டால், என்னால் அதைச் செய்ய முடியும்.” என்று அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “நான் ஒவ்வொரு நாளையும் வாழ்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரு புதிய செயல்திறனை செய்யும்படி தூண்டுகிறது. அப்படியொரு தங்கப் பதக்கத்தை மட்டும் குறிவைக்க முடியாது.
நான் இப்போது முதலில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதை எதிர்நோக்கி உள்ளேன். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.”என்றும் செல்வா பிரபு கூறினார்.