பெண்கள் உலக கோப்பை கால்பந்து.. இறுதிபோட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

மகளிர் உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வென்று ஸ்பெயின் இறுதி போட்டிக்கு முன்னேறியது. மகளிர் உலக கோப்பை தொடரின் இறுதி போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.
பெண்கள் உலக கோப்பை கால்பந்து.. இறுதிபோட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து
Published on

பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற முதல் இரண்டு காலிறுதி ஆட்டங்களில் நெதர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணியும், ஜப்பானை வீழ்த்தி சுவீடன் அணியும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற அடிப்படையில் ஸ்வீடனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் 2023 மகளிர் கால்பந்து உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் 1-3 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி அமோக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com