இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது பிபா

இந்திய கால்பந்து கூட்டமைப்பு மீதான தடையை பிபா நீக்கியது.2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
கால்பந்து
கால்பந்து
Published on

புதுடெல்லி:

17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

இதற்கிடையே, இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை பிபா அமைப்பு இன்று நீக்கியது.

இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் ஜூனியர் மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என பிபா தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com