

2026-ஆம் ஆண்டிற்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 11 அன்று மெக்சிகோவில் தொடங்கி, ஜூலை 19 வரை நடக்க உள்ளது. தொடரின் இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நியூஜெர்சி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக 48 நாடுகள் கலந்துகொண்டு 104 போட்டிகளில் விளையாட உள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரில் ஈரான் ஈடுபட்டு வருவதால், அமெரிக்காவின் லாஸ் எஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் மைதானங்களில் விளையாட ஈரானுக்கு அனுமதியளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஈரானிய கால்பந்து அணியின் வீரர்களுக்கு விசாக்கள் அங்கீகரிக்கபட்டு, அவற்றைப் பெறும் செயல்முறையில் இருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஈரானிய அணிக்கான விசாக்களை பெற்று தந்ததற்காக, துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அவர், “விளையாட்டு எல்லைகளைக் கடந்து நிற்கிறது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் போட்டியாளர்களையும் ரசிகர்களையும் வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று சமூகவலைதளத்தில் பராக் பதிவிட்டுள்ளார்.