FIFA 2026 | மெக்சிகோ வீரர் ஜூலியன் குவினோன்ஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மூன்று வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
Julian Quinones’ starring show secure Mexico’s 2-0 win
Published on

2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி மெக்சிகோவில் வியாழக்கிழமை தொடங்கியது. இங்குள்ள எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

முதல் கோல் அடித்த மெக்சிகோ:

முதல் பாதியின் தொடக்கத்திலேயே ஜூலியன் குவினோன்ஸ் மெக்சிகோ அணிக்காக முதல் கோல் கணக்கை தொடங்கினார்.

ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஸ்பெபெலோ யாயா சிதோல் வீரருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ரவுல் ஜிமெனெஸ் மற்றொரு கோல் அடித்து மெக்சிகோ அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதையடுத்து 83-வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் தெம்பா ஸ்வானே வன்முறையில் நடந்து கொண்டதாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் மெக்சிகோவை சேர்ந்த செசார் மொண்டெஸ் வீரரும் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி 9 வீரர்களுடனும், மெக்சிகோ அணி 10 வீரர்களுடனும் ஆட்டத்தை முடித்தன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி,மெக்சிகோ அணி தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஆட்ட நாயகன் விருது:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மெக்சிகோவின் வெற்றிக்கு வித்திட்ட ஜூலியன் குவினோன்ஸ் வீரருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com