ஓய்வு அறிவித்தார் பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்

ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரராவர். இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் விருதை வென்றுள்ளார்.
ஓய்வு அறிவித்தார் பிரபல டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்
Published on

ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இவர் தற்பொழுது அவரது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அது ரஃபேலின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதில் அவர் "நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. இந்த முடிவு அனைவரும் ஒரு நாள் எடுக்கதான் செய்ய வேண்டும், இந்த முடிவை எடுப்பதற்கு மிகவும் கடினமாகதான் இருந்தது."

"இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் உள்ளது. என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கோப்பைக்காக விளையாடவுள்ளேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணி, அம்மா, அப்பா, மாமா, என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய ரசிகர்களாகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்," என மிக உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com