தேசிய விளையாட்டு போட்டி - துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்குவங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.
இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்
Published on

அகமதாபாத்:

36-வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் அணிக்காக ஆடிய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன், கர்நாடக வீராங்கனை திலோத்தமாவை 16-10 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.

இதில் கர்நாடக வீராங்கனை திலோத்தமா வெள்ளியும், மேற்கு வங்க வீராங்கனை மெஹுலி கோஷ் வெண்கலமும் வென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com