மேல்முறையீடு மனு தள்ளுபடி - வினேஷ் போகத்தின் வெள்ளி பதக்க கனவு பறிபோனது

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது.தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு.
Vinesh Phogat
Published on

பாரீஸ்:

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரையிறுதியில் அவரிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதிபெற்றார்.

இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார்.

தனது தகுதிநீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக்கூறிய வினேஷ் போகத், இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. வினேஷ் போகத் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தீர்ப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த முடிவால் வினேஷ் போகத்தின் வெள்ளி பதக்க கனவு பறிபோயுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com