உலக சாம்பியன்ஷிப் செஸ்: இந்திய வீரர் டி. குகேஷ் உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதல்- தேதி அறிவிப்பு

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர் 25-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வரை ஜெனீவாவில் நடைபெறுகிறது.
D Gukesh
டி குகேஷ்
Published on

உலக சதுரங்க கூட்டமைப்பு நடத்தும் 2026 உலக சாம்பியன்ஷிப் செஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி நவம்பர் 25-ந்தேதி தொடங்கி, டிசம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

டி. குகேஷ்

இதில் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரான டி. குகேஷ், உஸ்பெகஸ்தானைச் சேர்ந்த ஜவோகிர் சிண்டரோவ்-ஐ எதிர்கொள்கிறார். இதில் இருவரும் 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவார்கள். 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் இருவர் உலக சாம்பியன்ஷிப்பில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த போட்டி 14 கிளாசிக்கல் கேம்ஸ்களை கொண்டதாகும். முதல் 7.5 புள்ளிகளை பெறும் வீரர் வெற்றி பெற்றவராக கருதப்படுவார். ஒருவேளை 7-7 என சமநிலை பெற்றால், டை-பிரேக்கர் நடத்தப்படும்.

20 வயதான இந்திய வீரரான டி. குகேஷ் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாதன் ஆனந்த்

உலக சதுரங்க கூட்டமைப்பின் இடைக்காலத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் இந்த அறிவிப்பு குறித்து கூறியதாவது:-

இந்தியா, அமெரிக்கா மற்றும் சைப்ரஸ் உள்ளிட்ட பல நாடுகள் FIDE உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டின. அனைத்து முன்மொழிவுகளையும் கவனமாகப் பரிசீலித்த பிறகு, நடுநிலையான ஒரு இடத்தில் போட்டியை நடத்த FIDE முடிவு செய்துள்ளது.

ஜெனீவா

அதன்படி, நாடுகளையும் கலாச்சாரங்களையும் ஒன்றிணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் கொண்ட ஜெனீவா நகரில் இப்போட்டி நடைபெறவுள்ளது. சுவிட்சர்லாந்திற்கு உலகெங்கிலும் உள்ள சதுரங்கச் சமூகத்தை வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

உள்ளூர் சதுரங்க ரசிகர்கள் உலகத் தரம் வாய்ந்த ஆட்டத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். அதேவேளையில், சதுரங்க உலகின் மிக உயரிய பட்டத்திற்கான இந்த போட்டி நடைபெறும்போது, ​​உலகம் முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்கள் இணையம் வழியாக இதைக்காண முடியும்.

இப்போட்டி 14 கிளாசிக்கல் ஆட்டங்களைக் கொண்டிருக்கும். 7½ புள்ளிகளை முதலில் பெறும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்தப் புள்ளியை எட்டியவுடன் மேற்கொண்டு ஆட்டங்கள் எதுவும் நடத்தப்படாது. 14 கிளாசிக்கல் ஆட்டங்களுக்குப் பிறகும் சமநிலை நீடித்தால், டை-பிரேக்கர் (tie-break) முறையின் மூலம் உலக சாம்பியன் தீர்மானிக்கப்படுவார்.

நடப்பு சாம்பியனான டி. குகேஷ் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்பார். இவர் 2024-ல் சிங்கப்பூரில் நடைபெற்ற போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com