

கிளாஸ்கோ 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவுப் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, தனது மூன்றாவது தொடர்ச்சியான தங்க பதக்கத்தை வென்று, இந்தியாவிற்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்த இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் தனது அறிமுகத்திலேயே, ஆண்களுக்கான 65 கிலோ எடை பிரிவில் பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டி வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், இங்கு நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகள் அனைத்திலும் இந்தியா குறைந்தது ஒரு பதக்கத்தையாவது உறுதி செய்தது.
முத்துப்பாண்டி 'ஸ்னாட்ச்' (snatch) முறையில் 126 கிலோவையும், 'கிளீன் அண்ட் ஜெர்க்' (clean and jerk) முறையில் 160 கிலோவையும் தூக்கி, மொத்தம் 286 கிலோ எடையுடன் போட்டியை நிறைவு செய்தார்.
மலேசியாவின் முஹம்மது அஸ்னில் பின் பிடின், மொத்தம் 299 கிலோ எடையைத் தூக்கி போட்டி சாதனையுடன் தங்க பதக்கத்தை வென்றார்; அதேவேளையில், பப்புவா நியூ கினியாவின் மோரியா பாரு மொத்தம் 282 கிலோ எடையைத் தூக்கி வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார்.
முன்னதாக ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையை தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்திருந்த சானு, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவை தொடங்கும் போது 82 கிலோ எடையை தூக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. அவர் தனது இரண்டாவது முயற்சியில் 82 கிலோ எடையை வெற்றிகரமாக தூக்கினார்.
அதனை தொடர்ந்து, தனது மூன்றாவது முயற்சியில் 85 கிலோ எடையை தூக்கி, புதிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் சாதனையை நிகழ்த்தி மற்றொரு பிரமிக்க வைக்கும் செயல்திறனை வெளிப்படுத்தினார். பின்னர் சானு 105 கிலோ எடையை தூக்கி, அதனை வெற்றிகரமாக தன் தலைக்கு மேலே உயர்த்தி, தங்க பதக்கத்தை உறுதிசெய்ததோடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் தனது ஹாட்ரிக் தங்க பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார்.