ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: கிரிக்கெட்டர் உள்பட 24 வீரர்கள் சஸ்பெண்ட்

NADA-வின் ஊக்கமருந்து சோதனை அடிப்படையில் கிரிக்கெட் வீரர், தடகள வீராங்கனை உள்பட 24 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி: கிரிக்கெட்டர் உள்பட 24 வீரர்கள் சஸ்பெண்ட்
ஊக்கமருந்து சோதனை
Published on

NADA-வின் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த கிரிக்கெட் வீரர் பூபன் லால்வானி, வெயிட்லிஃப்டர் அஜித் நாராயணா (சமீபத்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கல பதக்கம் வென்றவர்) மல்யுத்த வீரர் ஹாசில் ஜக்லான் உள்பட 24 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கான 1500மீ ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை வைத்துள்ள கே.எம். தீக்‌ஷனாவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவருடைய மாதிரியில் ஸ்டானோசோலோல் (Stanozolol) எனும் ஸ்டீராய்டு இருப்பது கண்டறியப்பட்டது.

கிரிக்கெட் வீரரான லால்வானி மும்பை மற்றும் சத்தீஷ்கர் அணிகளுக்கான உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த சீசனில் உத்தரகாண்ட் அணிக்காக விளையாடினார். ஒட்டுமொத்தமாக 26 முதல்தர போட்டிகளிலும், 3 லிஸ்ட் ஏ, 2 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com