ஹுசைன் ஷாண்டோ அதிரடி - ஜிம்பாப்வே வெற்றிபெற 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

டி20 உலக கோப்பை தொடரில் இன்று வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முதலில் ஆடிய வங்காளதேசம் 150 ரன்களை எடுத்துள்ளது.
அரை சதமடித்த ஹுசைன் ஷாண்டோ
அரை சதமடித்த ஹுசைன் ஷாண்டோ
Published on

பிரிஸ்பேன்:

டி 20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெறும் போட்டியில் வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கார் டக் அவுட்டானார். லிட்டன் தாஸ் 14 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் ஷகில் அல் ஹசன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹுசைன் ஷாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிப் அல் ஹசன் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹுசைன் ஷாண்டோ அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 55 பந்தில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இறுதியில், வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com