ஹசரங்கா சுழலில் சிக்கிய ஜிம்பாப்வே- 82 ரன்னில் ஆல் அவுட்

ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ரன்கள் அடித்தார்.இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
ஹசரங்கா சுழலில் சிக்கிய ஜிம்பாப்வே- 82 ரன்னில் ஆல் அவுட்
Published on

ஜிம்பாப்வே அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டியில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதல் நடந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. இதனையடுத்து நடந்த டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும் 2-வது போட்டியில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 14.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரையன் பென்னட் 29 ரன்கள் அடித்தார்.

இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும் மேத்யூஸ், தீக்ஷனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com