2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை 145 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்

டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே 145 ரன்களில் ஆல் அவுட்டானது.
2வது ஒருநாள் போட்டி: ஜிம்பாப்வேயை 145 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்
Published on

புலவாயோ:

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி 32.3 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டியான் மையர்ஸ் 33 ரன்னும், சீன் வில்லியம்ஸ் 31 ரன்னும், எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், ஆகா சல்மான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com