ஆசிய விளையாட்டு போட்டி - நேபாளத்துக்கு எதிரான காலிறுதியில் சதமடித்த ஜெய்ஸ்வால்

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டி - நேபாளத்துக்கு எதிரான காலிறுதியில் சதமடித்த ஜெய்ஸ்வால்
Published on

பீஜிங்:

ஆசிய விளையாட்டில் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்குகின்றன.

இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் காலிறுதியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கெயிக்வாட், ஜெயிஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.

ஆரம்பம் முதல் ஜெயிஸ்வால் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். 25 ரன்கள் எடுத்திருந்த கெயிக்வாட் அவுட்டானார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெயிஸ்வால் 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com