ரகானே- ஷர்துல் தாகூர் போராட்டம்: இந்தியா 3-ம் நாள் உணவு இடைவேளை வரை 260/6

கே.எஸ். பரத் நேற்றைய ரன்னிலேயே ஆட்டம் இழந்தார்ஆஸ்திரேலிய வீரர்கள் ஏராளமான கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர்
ரகானே- ஷர்துல் தாகூர் போராட்டம்: இந்தியா 3-ம் நாள் உணவு இடைவேளை வரை 260/6
Published on

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களும், கே.எஸ். பரத் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் இன்று ரன் கணக்கை தொடங்காமல் நேற்றைய ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து ரகானே உடன் ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். ஷர்துல் தாகூர் முதலில் உடலில் அடி வாங்கினார். நேரம் செல்ல செல்ல சுதாரித்து விளையாட ஆரம்பினார். மறுமுனையில் ரகானே சிறப்பாக விளையாடினார். அவர் 92 பந்தில் அரைசதம் அடித்தார்.

இன்று ஆஸ்திரேலியாவின் பீல்டிங் சிறப்பாக அமையவில்லை. 4 கேட்ச்களை தவறவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் எல்.பி.டபிள்யூ. ஆகிய பந்து நோ-பால் ஆக வீசப்பட்டதால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.

இதனால் 3-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 6 விக்கெட்டுக்கு மேல் இழக்கவில்லை. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் சேர்த்துள்ளது. ரகானே 89 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com