சமூக வலைதளங்களில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி

மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவியது.
சமூக வலைதளங்களில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி
Published on

புதுடெல்லி:

2-வது மகளிர் பிரீமியர் 'லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது.

பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

பெங்களூரு அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து. கோப்பையை வென்றது. டெல்லி அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. கடந்த தடவை மும்பையிடம் தோற்று இருந்தது.

இந்நிலையில் கோப்பை வென்ற ஆர்சிபி அணி சமூக வலைதளங்களில் புதிய சாதனையை படைத்துள்ளது. அது என்னவென்றால் சாம்பியன் கோப்பையுடன் அணி வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 9 நிமிடங்களில் 10 லட்சம் லைக்குகளை குவித்தது.

இதன்மூலம் இந்தியாவிலேயே மிகக்குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற புதிய சாதனையை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com