அருவருக்கத்தக்க மெசெஜ் அனுப்புகிறார்கள்- இந்திய ரசிகர்கள் மீது மேக்ஸ்வெல் மனைவி குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும்.இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.
அருவருக்கத்தக்க மெசெஜ் அனுப்புகிறார்கள்- இந்திய ரசிகர்கள் மீது மேக்ஸ்வெல் மனைவி குற்றச்சாட்டு
Published on

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதை மேக்ஸ்வெல் மனைவி வினி ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு இந்திய ரசிகர்கள் அருவருக்கத்தக்க மெசெஜ்களை அனுப்புவதாக வினி ராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்தியாவுக்கு மட்டுமல்ல என் கணவரின் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இதைசொல்ல வேண்டிய அவசியம் எழுந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை.

இந்தியராக நீங்கள் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் அதே நேரத்தில், உங்கள் குழந்தைக்கு தந்தையாக இருக்கும் உங்கள் கணவர் விளையாடும் அணியையும் ஆதரிக்க வேண்டியது முக்கியம். இந்த மாதிரி பேசுவதை விட்டு, உங்களது கோபத்தை உலகில் நிகழும் முக்கியமான பிரச்சினை மீது திருப்புங்கள்.

என்று வினி ராமன் கூறினார்.

மேக்ஸ்வெல்லின் மனைவி வினி ராமன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com