ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டம்... அயர்லாந்துக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில் லாரா 3 விக்கெட், ஓர்லா 2 விக்கெட் கைப்பற்றினர்.
ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டம்... அயர்லாந்துக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
Published on

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களம் இறங்கினர். சிறப்பான தொடக்கம் கொடுத்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஷபாலி வர்மா 43 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் களம் புகுந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்மிருதி மந்தனா அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் கேப்டன் கவுர் 13 ரன்னிலும், அடுத்து இறங்கிய ரிச்சா கோஷ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஜெமிமா களம் புகுந்தார். மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய மந்தனா 56 பந்தில் 87 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அயர்லாந்து தரப்பில்  கேப்டன் லாரா டெலானி 3 விக்கெட், ஓர்லா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதே ஓவரின் 5வது பந்தில் ஓர்லா ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேபி லெவிஸ், கேப்டன் லாரா டெலானி ஆகியோர் நிதானமாக விளையாடினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com