மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து

அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.
மகளிர் கிரிக்கெட்: இந்தியாவுக்கு 239 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து
Published on

அயர்லாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக சாரா ஃபோர்ப்ஸ் - கேப்டன் கேபி லூயிஸ் களமிறங்கினர்.

இதில் சாரா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உனா ரேமண்ட்-ஹோய் 5, ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 9, லாரா டெலானி 0 என அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனையடுத்து கேப்டன் கேபி லூயிஸ் மற்றும் லியா பால் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

லியா பால் 59 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லூயிஸ் 92 ரன்னில் தீப்தி சர்மா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com