மகளிர் கிரிக்கெட்: இந்தியா - வங்காளதேசம் 3வது போட்டி டை ஆனது.. சமனில் முடிந்தது ஒருநாள் தொடர்

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் 77 ரன்கள் குவித்தார்.
மகளிர் கிரிக்கெட்: இந்தியா - வங்காளதேசம் 3வது போட்டி டை ஆனது.. சமனில் முடிந்தது ஒருநாள் தொடர்
Published on

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் 3 டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி 2-1 என தொரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் இருந்தது.

தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி தரப்பில் பர்கானா 105 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை ஷாபாலி வர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ்டிகா 5 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல் இணைந்து சிறப்பாக விளையாடினார். அரை சதம் அடித்த மந்தனா 59 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்மான்ப்ரீத் கவுர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வேளிப்படுத்திய ஹர்லீன் தியோல் 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. 1 விக்கெட் கைவசம் இருந்தது. ஆனால் அந்த ஓவரில் மருபா அக்டர் வீசிய முதல் 2 பந்தில் 2 ரன்கள் எடுத்த நிலையில், மேக்னா சிங் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 49.3 ஓவரில் 225 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் போட்டி டையில் முடிந்தது. அத்துடன், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான மகளிர் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com