மகளிர் உலக கோப்பை: அரைசதம் விளாசிய ஷபாலி வர்மா- 20 ஓவரில் இந்தியா 114/1

ஸ்மிரிதி மந்தனா 45 ரன்கள் அடித்து அரைசதம் வாய்ப்பை இழந்தார்.ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
மகளிர் உலக கோப்பை: அரைசதம் விளாசிய ஷபாலி வர்மா- 20 ஓவரில் இந்தியா 114/1
Published on

நவி மும்பையில் நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியாவின் ஸ்மிரி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டததை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியா 6.3 ஓவரில் 50 ரன்களை கடந்து, 17.2 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்மிரிதி மந்தனா 58 பந்தில் 8 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 49 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

2ஆவது விக்கெட்டுக்கு ஷபாலி வர்மா உடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்துள்ளார். இந்தியா 20 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் அடித்துள்ளது. ஷபாலி வர்மா 56 ரன்களுடனும், ரோட்ரிக்ஸ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com