

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் குரூப் 2-ல் இடம் பிடித்துள்ள ஸ்காட்லாந்து- அயர்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் கேத்ரின் பிரைஸ் 60 ரன்களும், விக்கெட் கீப்பரான சாரா பிரைஸ் 49 ரன்களும் விளாசினர்.
பின்னர் 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. அந்த அணியின் தெடாக்க பேட்டர் எமி ஹன்டர் 39 ரன்களும், 4-வது பேட்டர் ஓர்லா பிரேண்டர்காஸ்ட் 33 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து 19.1 ஓவரில் 121 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஸ்காட்லாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஸ்காட்லாந்து அணி சார்பில் கிறிஸ்டி கார்டன், கேதரின் பிராசர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.