டி20 மகளிர் உலக கோப்பை: ஸ்மிரிதி மந்தனா அரைசதத்தால் பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

ஸ்மிரிதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ரிச்சா கோஷ் ஆட்டத்தால் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.
டி20 மகளிர் உலக கோப்பை: ஸ்மிரிதி மந்தனா அரைசதத்தால் பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா
Published on

டி20 மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. குரூப் 1-ல் இடம் பிடித்துள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பர்மிங்காமில் விளையாடி வருகின்றன.

ஸ்மிரிதி மந்தனா அரைசதம்

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். ஷபாலி வர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 1 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா உடன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஸ்மிரிதி மந்தனா 44 பந்தில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீதி கவுர் 36 ரன்களில் வெளியேறினார். விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 17 பந்தில் 34 ரன்கள் விளாச இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com