பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

இந்தியா 251 ரன்கள் சேர்த்தது. இரண்டு வீராங்கனைகள் அரைசதம் அடித்தனர்.ஆஸ்திரேலியா 36.1 ஓவரிலேயே சேசிங் செய்தது.
பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
Published on

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி ஹோபர்ட்டில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 52 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன்களும் சேர்த்தனர். ஸ்மிரிதி மந்தனா 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பின்னர் 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஜார்ஜியா அபாரமாக விளையாடி 82 பந்தில் 101 ரன்கள் விளாசினார். தொடக்க வீராங்கனை லிச்பீல்டு 62 பந்தில் 80 ரன்கள் சேர்த்தார். இதனால் 36.1 ஓவரிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றியுள்ளது.

3-வது மற்றும் கடைசி போட்டி மார்ச் 1-ந்தேதி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com