

நியூசிலாந்து அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர் கேன் வில்லியம்சன். தற்போது நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கான நியூசிலாந்த அணியில் கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருந்தார். முதல் டெஸ்ட் போட்டி லார்டஸ் மைதானத்தில் கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்சில் 2 பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 36 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் நேற்று திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி முடிவை வெளியிட்டார்.
இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக கருதப்பட்ட விராட் கோலி, ஸ்மித், ஜோ ரூட் உடன் ஒப்பிடப்பட்டவர் கேன் வில்லியம்சன்.
கேன் வில்லியம்சன் விலகியதால், இங்கிலாந்து தொடருக்கான மற்ற இரண்டு போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் வில் யங் சேர்க்கப்பட்டுள்ளார்.
35 வயதான கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில விளையாடி 33 சதம், 38 அரைசதங்களுடன் 9515 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
175 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்களுடன் 7256 ரன்களும், 93 டி20 போட்டிகளில் 2575 ரன்களும் அடித்துள்ளார்.