வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: வங்கதேசம் 321 ரன்கள் குவிப்பு

முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது.6வது விக்கெட்டுக்கு இணைந்த மஹமதுல்லா-ஜேகர் அலி ஜோடி 150 ரன்கள் சேர்த்தது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: வங்கதேசம் 321 ரன்கள் குவிப்பு
Published on

செயிண்ட்கிட்ஸ்:

வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கா அரை சதமடித்து 73 ரன்னில் அவுட்டானார். கேப்டன் மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.

கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா, ஜேகர் அலி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

இறுதியில், வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்துள்ளது. மஹமதுல்லா 84 ரன்னும், ஜேகர் அலி 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com