ஹோல்டர், ஷாய் ஹோப் அசத்தல்: முதல் டி20 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

முதலில் நடந்த ஒருநாள் தொடரை 1-0 என இலங்கை அணி வென்றது.
holder
Published on

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இலங்கை வென்றது. மழை காரணமாக 2 போட்டிகள் ரத்தானது. இதனால் இலங்கை அணி 1-0 என தொடரை வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கமிந்து மெண்டிஸ் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ் 36 ரன்னும், டாசன் ஷனகா 22 ரன்னும் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், ஷமார் ஜோசப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் அரை சதம் கடந்து 65 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். பிராண்டன் கிங் 37 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ஹோல்டருக்கு வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com