ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்: காரணம் இதுதான்

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இலங்கை வீரர்: காரணம் இதுதான்
Published on

ஆண்டிகுவா:

டி20 உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

நடப்பு உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பிடித்த இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவியது.

நேபாளத்திற்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி நெதர்லாந்துடன் மோதுகிறது.

இந்நிலையில், லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் கீழே தள்ளிவிட்டோம்.

எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக எங்களால் மகிழ்ச்சியை தரமுடியாதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என கொஞ்சம்கூட நினைக்கவில்லை.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் சுற்றுப் பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது.

இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்சுகளுக்கும், டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com