நாங்களும் விளையாட்டுக்கு வரலாமா.. மைதானத்துக்குள் நுழைந்த உடும்பு.. வைரலாகும் வீடியோ

இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
நாங்களும் விளையாட்டுக்கு வரலாமா.. மைதானத்துக்குள் நுழைந்த உடும்பு.. வைரலாகும் வீடியோ
Published on

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது உடும்பு ஒன்று மைதானத்திற்கு நுழைந்தது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது.

ஆப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டெஸ்ட் போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 62.4 ஓவர்களில் 198 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 410 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 212 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் போது உடும்பு ஒன்று கிரிக்கெட் மைதானத்திற்கு நுழைந்தது. இதனால் விளையாட்டு உடனடியாக நிறுத்தப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. நடுவர் ஒருவரின் பெரும் முயற்சிக்கு பிறகு உடும்பு மைதானத்தை விட்டு வெளியேறி ஓடியது. இதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது.

மற்ற நாட்டு மைதானத்துக்குள் நாய், புறா வந்து பார்த்ததுண்டு. ஆனால் இலங்கையில் மட்டும் நாய், பாம்பு, உடும்பு மைதானத்துக்குள் வந்துள்ளது. இதற்கு முன் இலங்கை பீரிமியர் லீக் தொடரின் போது பாம்பு 2 முறை மைதானத்துக்குள் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com