டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு சோக செய்தி- முக்கிய வீரர் விலகல்

இலங்கை அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை வென்றது. இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஓமன் அணியை பிப்ரவரி 12-ம் தேதி எதிர்கொள்கிறது.
டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு சோக செய்தி- முக்கிய வீரர் விலகல்
Published on

10-வது உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்துக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வனிந்து ஹசரங்காவுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட தொடை நரம்பு காயம் தீவிரமடைந்ததால், தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். வனிந்து ஹசரங்கா விலகியது இலங்கை அணிக்கு இது மிகப்பெரிய இழப்பு ஆகும். அவருக்குப் பதிலாக துஷன் ஹேமந்த அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இலங்கை அணி தனது அடுத்த போட்டியில் ஓமன் அணியை பிப்ரவரி 12-ம் தேதி எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com