6 மாதமாக மொபைல் போன் கிடையாது- கடும் நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி

பிசிசிஐ வினோத் காம்ப்ளிக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது.கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
6 மாதமாக மொபைல் போன் கிடையாது- கடும் நிதி நெருக்கடியில் வினோத் காம்ப்ளி
Published on

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பர். 51 வயதாகும் அவருக்கு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு அவர் நேற்று மருத்துவமனையில் இருந்து இந்திய ஜெர்சி அணிந்து டிஸ்சார்ஜ் ஆனார். இது தொடர்பான வீடியோ வைரலானது.

இந்நிலையில், வினோத் காம்ப்ளி பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் எந்த அளவுக்கு அவரின் நிலைமை உள்ளது என்பது வெளிப்படவில்லை. தற்போது அது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கடந்த 6 மாதமாக வினோத் காம்ப்ளி மொபைல் போன் இல்லாமல் இருந்து வந்துள்ளார். இதற்கு முன் ஐபோன் பயன்படுத்திய நிலையில், தனது வீட்டை பழுதுபார்ப்பதற்கு ரூ.15,000 கட்டத் தவறியதால், அதற்கு பதிலாக வினோத் காம்ப்ளியின் ஐபோனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் 13 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த வினோத் காம்ப்ளி, இப்போது அதனையும் தொலைத்துவிட்டு பிசிசிஐ வழங்கிவரும் ஓய்வூதியத்தை தனது குடும்பச் செலவுகளுக்கு நம்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. பிசிசிஐ அவருக்கு மாத ஓய்வூதியமாக ரூ.30,000 வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் வீடும் கடனில் உள்ளது. சமீபத்தில் காம்ப்ளியின் மனைவி அளித்த பேட்டியில், ரூ.18 லட்சம் வீட்டுக் கடனுக்காக வங்கி தங்களை தொந்தரவு செய்வதாக கூறியிருந்தார். எனினும் ஒரு அரசியல்வாதி சமீபத்தில் இவர்களுக்கு ரூ.5 லட்சம் கொடுத்தாலும், அது வீட்டுக் கடனை அடைக்க போதுமானதாக இல்லை என்று வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com