ஏன் பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறீர்கள்.. பாக்., ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த இந்திய வீரர்கள்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டது.
ஏன் பாகிஸ்தானுக்கு வர மறுக்கிறீர்கள்.. பாக்., ரசிகர் கேள்விக்கு பதில் அளித்த இந்திய வீரர்கள்
Published on

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது, ஆனால் அரசியல் பதற்றம் காரணமாக இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இந்தியா வரவில்லை என்றால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நாங்கள் நடத்தபோவதில்லை என பாகிஸ்தான் கூறி வருகிறது.

இதற்கிடையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெளியில் வீடியோ கேம் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் சென்றனர். இவர்களை பார்த்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், அவர்களிடம், தயவுசெய்து ஒரு விஷயம் சொல்லுங்கள், நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யகுமார் யாதவ் அது நம் கையில் இல்லை என கூறினார். இதனை வீடியோ எடுத்த பாகிஸ்தான் ரசிகரை ரிங்கு சிங், வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com