கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்-சுருதி ரகுநாதன் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்

கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்-சுருதி ரகுநாதன் திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகிறார்.ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2021-ம் ஆண்டில் இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வானார்.
Published on

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐ.பி.எல். மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஐ.பி.எல். தொடரில் 50 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 1,326 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் வெங்கடேஷ் ஐயருக்கு, சுருதி ரகுநாதனுக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று கரம் பிடித்தார். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com