அமெரிக்க கிரிக்கெட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை

அமெரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அகிலேஷ் ரெட்டிக்கு ஐசிசி 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதித்துள்ளது.
அகிலேஷ் ரெட்டி
அகிலேஷ் ரெட்டி
Published on

அபுதாபி T10 லீக்கில் ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிமுறையின் மூன்று பிரிவுகளை மீறியதால் ஆஃப் ஸ்பின் சுழற்பந்து வீச்சாளரான அகிலேஷ் யாதவ், 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

2025-26 அபிதாபி T10 தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னரான பி. அகிலேஷ் யாதவ் அஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.

போட்டிகளின் முடிவு, நடத்தை அல்லது வேறு ஏதேனும் அம்சத்தை சரிசெய்ய சூழ்ச்சி செய்ய அல்லது முறையற்ற முறையில் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பது அல்லது முறையற்ற முறையில் செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு உடன்படிக்கை அல்லது முயற்சியில் பங்கெடுப்பது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளின்போது மற்றொரு பங்கேற்பாளரை தூண்டுவது, ஆசை காட்டுவது, இணங்க வைப்பது, ஊக்குவிப்பது, அல்லது வேண்டுமென்றே வசதி செய்து கொடுப்பது.

விசாரணைக்குத் தொடர்புடையதாக இருக்கக்கூடிய தரவுகளையும் செய்திகளையும் ஒரு மொபைல் சாதனத்திலிருந்து நீக்குவதன் மூலம் விசாரணைக்குத் தடை ஏற்படுத்துவது.

ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு

ஆகிய மூன்று விதிகளை அவர் மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஐசிசி-யின் ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஐசிசி-யின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவர் குற்றம் செய்ததை உறுதி செய்தது.

இதனால் கடந்த நவம்பர் மாதம் 2025-ம் தேதியில் இருந்து 8 காலத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 26 வயதான அகிலேஷ் ரெட்டி அமெரிக்கா அணிக்காக 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com