ஹரி நிஷாந்த், சன்னி சந்து அதிரடி: திருச்சி வெற்றிபெற 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேலம்

டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி 179 ரன்களை குவித்தது.
ஹரி நிஷாந்த், சன்னி சந்து அதிரடி: திருச்சி வெற்றிபெற 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சேலம்
Published on

கோவை:

டிஎன்பிஎல் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோயம்புத்தூரில் நடந்து வருகின்றன. கோவையில் இன்று நடைபெறும் 7வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை பெய்ததால் ஆட்டம் சிறிது தடைபட்டது.

அதன்படி, சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ராஜேந்திரன் விவேக் 2 ரன்னிலும், கவின் 3 ரன்னிலும் வெளியேறினர்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஹரி நிஷாந்த் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். அடுத்து இறங்கிய சன்னி சந்து அதிரடியில் மிரட்டினார். ஹரி நிஷாந்த் 58 பந்தில் 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். சன்னி சந்து 27 பந்தில் 45 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டுக்கு ஹரி நிஷாந்த், சன்னி சாந்து ஜோடி 93 ரன்கள் சேர்த்தது.

இறுதியில், சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.

திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com