டிஎன்பிஎல்: திருச்சி வெற்றிபெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்

டி.என்.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் ஆடிய திண்டுக்கல் 160 ரன்களை எடுத்துள்ளது.
டிஎன்பிஎல்: திருச்சி வெற்றிபெற 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்
Published on

சேலம்:

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 8-வது சீசன் நேற்று சேலத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மாலை 3.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி கேப்டன் அந்தோனி தாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, திண்டுக்கல் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கேப்டன் அஸ்வின் 5 ரன்னிலும், விமல்குமார் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ஷிவம் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். 3வது விக்கெட்டுக்கு பாபா இந்திரஜித், ஷிவம் சிங் ஜோடி 82 ரன் சேர்த்தது.

பாபா இந்திரஜித் 33 ரன்னிலும், ஷிவம் சிங் 78 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

இறுதியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

திருச்சி அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஈஸ்வரன் ஹாட்ரிக் உள்பட 6 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com