டிஎன்பிஎல்: சஞ்சய் யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சோனு யாதவை ரூ.15.20 லட்சத்துக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது. 12.80 லட்சத்துக்கு ஹரிஷ் குமாரை சேப்பாக் சூப்பர் கீல்லீஸ் விலைக்கு வாங்கியது.
டிஎன்பிஎல்: சஞ்சய் யாதவை ரூ.17.60 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Published on

சென்னை:

டிஎன்பிஎல் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. முதலில் ஏ பிரிவு வீரர்கள் ஏலம் நடந்தது. இதில் இந்திய அணிக்காக விளையாடிய 5 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதில் விஜய் சங்கர் 10.25 லட்சம், வாஷிங்டன் சுந்தர் ரூ.6.75 லட்சம், நடராஜன் 6.25 லட்சம், சந்தீப் வாரியர் ரூ.8.5 லட்சம், சிவி வருண் ரூ.6.75 லட்சம் என ஏலம் போனார்கள்.

இதனையடுத்து பி பிரிவு வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்காக தேர்வாகி உள்ள சோனு யாதவை நெல்லை ராயல் கிங்ஸ் அணி ரூ.15.20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தனர்.

அப்போது வரை அதுவே அதிக தொகைக்கு ஏலம் போனதாக இருந்தது. இந்நிலையில் சஞ்சய் யாதவை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 17.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் இதுவரை நடந்த ஏலத்தில் அதிக தொகையாக இது இருந்துள்ளது. முன்னதாக ஹரிஷ் குமாரை 12.80 லட்சத்துக்கும் அபராஜித்தை ரூ.10 லட்சத்துக்கும் பிரதோஷ் 5 லட்சத்துக்கும் அதே அணி விலைக்கு வாங்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com