47 ரன்களில் வெற்றி பெற்ற திருப்பூர் தமிழன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்

திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
47 ரன்களில் வெற்றி பெற்ற திருப்பூர் தமிழன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. திருப்பூர் சார்பில் மான் பாப்னா 50 ரன்களை எடுத்தார். 170 ரன்களை துரத்திய திருச்சி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது.

அந்த அணியின் வசீம் அகமது, ராஜ்குமார் முறையே 10 மற்றும் 8 ரன் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 1 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் திருச்சி அணி 16.5 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் திருப்பூர் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருப்பூர் சார்பில் நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூம் திருப்பூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com