TNPL இறுதிப்போட்டி: திண்டுக்கல் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்

திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
TNPL இறுதிப்போட்டி: திண்டுக்கல் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்
Published on

9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாக இருக்கிறது.

இறுதிப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, திருப்பூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்மூலம், திருப்பூர் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது.

இதில், திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக, துஷர் ரஹாஜே 77 ரன்களும், அமித் சாத்விக் 65 ரன்களும் எடுத்தனர்.

புவனேஷ்வர் வெங்கடேஷ், வருண் சக்ரவர்த்தி, கணேஷன் பெரியசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், கார்த்திக் சரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இந்நிலையில், திருப்பூர் அணி நிர்ணயித்த 221 என்கிற வெற்றி இலக்கை அடைந்து போப்பையை வெல்லும் முனைப்பில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com