திருச்சி அணிக்கு எதிரான போட்டி.. 14 ரன்களில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சேப்பாக் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது.
திருச்சி அணிக்கு எதிரான போட்டி.. 14 ரன்களில் வெற்றி பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Published on

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் - சந்தோஷ் குமார் முறையே 51 மற்றும் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் அப்ராஜித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய டேரில் ஃபெராரியோ 15 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரஞ்சன் பால் - அபிஷேக் தன்வர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து 199 ரன்களை துரத்திய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் காரணமாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி சார்பில் ஜாபர் ஜமால் 52 ரன்களையும், வசீம் அகமது 48 ரன்களையும், ராஜ்குமார் 39 ரன்களையும் எடுத்தனர். சேப்பாக் சார்பில் அஸ்வின் க்ரிஸ்ட் 2 விக்கெட்டுகளையும், கனேஷன் பெரியசாமி மற்றும் அபிஷேக் தன்வார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com