TNPL 2025: திருச்சி அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்

திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
TNPL 2025: திருச்சி அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்
Published on

9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நடப்பு டி.என்.பி.எல். தொடரில் கடந்த ஆட்டத்தின் வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.

இதில், அதிகபட்சமாக விமல் குமார் 55 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். தொடர்ந்து, ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள், மான் பாஃப்னா 14 ரன்கள் எடுத்தனர்.

இதன்மூலம், 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com